Tuesday, 3 March 2015

இளவரசர் ஹாரிக்கும் எனக்கும் தொடர்பா..? நடிகை எம்மா வாட்சன் பதில்..!


ஹாரி பாட்டர் சீரிஸ் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன். தனது பத்து வயதில் நடிக்க வந்த எம்மா வாட்சன் தற்போது ஹாலிவுட்டின் கவர்ச்சிகரமான, செக்ஸியான நடிகை என்று வர்ணிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபகாலமாக இவரையும் இங்கிலாந்து இளவரசர் ஹாரியையும் இணைத்து ஊடகங்களில் செய்தி உலா வந்துக்கொண்டிருக்கிறது. அதாவது, கடந்த சில மாதங்களாக இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஓடிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இளவரசர் ஹாரிக்கு இது புதுக் காதல் இல்லை. அவர் பல பெண்களுடன் ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டவர்தான். அதேபோல எம்மா வாட்சனுக்கும் இது புது காதல் இல்ல. ஏற்கனவே 2 முறை காதல் வயப்பட்டு பின்னர் பிரிந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எம்மாவுடனான நட்பு அவரை ஆறுதல் படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியானது. இருவரும் பல இடங்களுக்கு ரகசியமாக போய் வந்துள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்த புகைப்படக்காரர் கண்ணிலும் இவர்கள் சிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
தற்போது இதனை மறுத்துள்ளார் எம்மா வாட்சன். இளவரசர் ஹாரியுடன் தன்னை சேர்த்து உலா வரும் தகவல்களை உண்மைக்கு புறம்பானது என அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment