வாலிப சங்க படம் மூலம் பிரபலமான ரிப்பன் நாயகி நடிப்பில் ஒரு சில படங்களே ரிலீஸ் ஆனாலும் அதற்குள்ள அவர் போடும் ஆட்டம் தாங்க முடியலையாம்.
இவர் நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்களை பெரும்பாடு படுத்திவிடுகிறாராம். அதோடு சம்பளத்தையும் படத்துக்கு படம் ஏற்றி விடுகிறாராம். மீண்டும் தொலைக்காட்சி நடிகருடன் இவர் நடித்த போலீஸ் யூனிபார்ம் படத்துக்கு பிறகு முக்கால் கோடி கேட்க ஆரம்பிச்சிருக்காராம்.
ஆனால் இவர் வாலிப சங்க படத்துக்கு முன்பே நடிக்க ஒப்புக்கொண்ட மலையில பூக்கிற மல்லி படத்துக்கு அவருக்கு பேசப்பட்ட சம்பளம் மூணு லட்சம். இப்போது அந்த படத்தை தூசி தட்டி எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இதுவரை புதிய சம்பளத்தை கேட்டு அடம்பிடித்து வந்த அந்த நடிகை இப்போது அடங்கிப்போய் நடிக்க ஓகே சொல்லிட்டாராம்.
காரணம் படத்தோட தயாரிப்பாளர் படம் தயாரிக்கிறவங்க சங்கத்துல பெரியபதவிக்கு வந்திருக்கிறார். இனி எதுவும் பண்ண முடியாதுன்னு ஒத்துக்கிட்டாராம். ஆனாலும் தயாரிப்பாளரே பெரிய மனசு பண்ணி திவ்யத்துக்கு இருக்கிற மார்க்கெட் வேல்யூவை கணக்கிட்டு பேசின சம்பளத்தை விட மூணு மடங்கு உயர்த்தி தர சம்மதிச்சிருக்காராம்.

No comments:
Post a Comment