Monday, 23 March 2015

மிக மோசமான நடிகைக்கான விருதை மீண்டும் வென்றார் சோனாக்ஷி…!


பாலிவுட் கடந்த வருடம் வெளியான திரைப்படங்களில் மிக மோசமான நடிகராக அர்ஜுன் கபூரும் மிக மோசமான நடிகையாக சோனாக்ஷி சின்ஹாவும் தேர்வாகியுள்ளனர்.
பாலிவுட்டில் மோசமான படைப்புகளுக்கு கோல்டன் ரஸ்ப்பெரி விருதுகள் வழங்கப்படுவதைப் போல், பாலிவுட்டில் கோல்டன் கேலா விருதுகள் வழங்கப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டு முதல் ரண்டம் மெகஸின் எனும் பத்திரிகையினால் இணையத்தளத்தில் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகள் மூலம் இவ்விருதுக்குரியவர்கள் தேர்வுசெய்யப்படுகின்றனர்.
இம்முறை 7 வது தடவையாக நடைபெற்ற இவ்விருது வழங்கல் விழா கடந்த சனிக்கிழமை டில்லியில் நடைபெற்றது. இதில் கன்டே படத்தில் நடித்தமைக்காக மிக மோசமான நடிகர் விருதுக்கு அர்ஜூன் கபூர் தேர்வுசெய்யப்பட்டார். மிக மோசமான நடிகைக்கான விருதை சோனாக்ஷி சின்ஹா தொடர்ச்சியாக 3 வது தடவையாக வென்றுள்ளார்.
எக் ஷன் ஜக் ஷன், லிங்கா, ஹொலிடே படங்களில் நடித்தமைக்காக இவ்விருது வழங்கப்பட்டது.
மிக மோசமான படத்துக்கான விருதை சயீப் அலி கான் நடித்த "ஹம்ஷாகல்ஸ்" படம் பெற்றது.
மிக மோசமான பாடகருக்கான விருதை யோ யோ ஹொனி சிங் பெற்றுள்ளார்.
மிக மோசமான அறிமுக நடிகருக்கான் விருதை டைகர் ஷெராவ் பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment