Monday, 23 March 2015

கழிவுப் பொருட்களால் கட்டப்பட்ட படகு வீடு..!


பிரேஸிலைச் சேர்ந்த நபர் ஒருவர் மக்களால் ஒதுக்கப்பட்ட குப்பை பொருட்கள் மூலம் தனக்கான மிதக்கும் வீடு ஒன்றை அமைத்துள்ளார். 30 வயதான ஹமில்டன் குன்ஹா பில்ஹோ எனும் இந்நபர் வசிப்பதற்கு இடமின்றி தவித்தவர்.
தற்போது அவர் குப்பைகளிலிருந்து சேகரிப்பட்ட பொருட்கள் மூலம் கட்டப்பட்ட வீட்டில் வசிக்கிறார். ரியோ டி ஜெனீரோ நகரின் குவானப்ரா குடாவில் இந்த படகுவீடு உள்ளது. ஒரு அறையை மட்டும் கொண்டதாக இந்த வீடு அமைந்துள்ளது.
தரையிலிருந்து இவ்வீட்டை அடைவதற்கும் அங்கிருந்து மீண்டும் தரையை அடைவதற்கும் தனது நீச்சல் திறமையை குன்ஹா பில்ஹோ பயன்படுத்துகிறார்.

No comments:

Post a Comment