Monday, 23 March 2015

போலீஸை கிழி கிழின்னு கிழித்த திருநங்கை... வாட்ஸாப்பில் பரவும் அடுத்த (வீடியோ)


வாராவாராம் வாட்ஸாப் மூலம் வீடியோ அல்லது ஆடியோவாவது பரவி ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருவது வழக்கமாகி விட்டது. நடிகைகளின் ஆபாச படங்களில் ஆரம்பித்த இந்த ட்ரெண்ட் தற்போது சென்னை போலீஸ் பக்கம் திரும்பியுள்ளது.
கடந்த வாரம், உதவிக் கமிஷ்னர் ஜொள்ளு விட்ட ஆடியோ, அதைத் தொடர்ந்து தொடர்ந்து பெண் போலீஸ் திட்டும் வீடியோ என்று வாட்ஸாப்பில் உலா வந்து ஒரு கலக்கு கலக்கின. இந்த பரபரப்பு ஓய்வதற்குள்ளாகவே, வாட்ஸாப்பில் அடுத்த போலீஸ் வீடியோ பரவத் தொடங்கி விட்டது.
(வீடியோ கீழே)
இந்த வீடியோவில், சென்னை போக்குவரத்து போலீஸார் ஒருவரை திருநங்கை ஒருவர் சர மாறியாக திட்டுகிறார். இந்த வீடியோவை வைத்து பார்க்கும் போது, போலீஸார் திருநங்கையை வாயில் குத்துவேன் என்று கூறியதும், இதனால் கோபமடைந்த திருநங்கை போலீஸாரை கண்டபடி திட்டுவதும் தெரிகிறது.
இதற்கிடையில், மற்றொரு போக்குவரத்து போலீஸுக்கு ஆதரவாக மற்றொரு போலீஸ் வந்துள்ளார். ஆரம்பத்தில், ஆபாச வார்த்தைகள் இல்லாமல் கோபமாக மட்டும் பேசிக் கொண்டிருந்த திருநங்கை, மற்றொரு போலீஸ் ஆபாசமாக பேச, பதிலுக்கு திருநங்கையும் கொச்சையாகப் பேசியுள்ளார்.
இந்த நிகழ்வை ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தும், திருநங்கை அவரைக் கண்டுகொள்ளாமல் கண்டபடி பேசியுள்ளார். வாட்ஸாப்பில் பரவியதை அடுத்து இது குறித்து புகார் கொடுக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில், இச்சம்பவம் கடந்த 12ம் திகதி சூளைமேடு சந்திப்பில் இந்த மோதல் நடந்ததும், சம்பந்தப்பட்ட பொலிசாரின் பெயர் குழந்தைவேலு சேகரன் (35) என்பதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட திருநங்கை மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
(வீடியோ கீழே)

No comments:

Post a Comment