பூமியில் ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு தடவையும் முழுமையான சூரிய கிரகணம் ஏற்படுவது வழமையாகும். ஐரோப்பாவில் இத்தகைய கிரகணம் கவனிக்கப்படுவது அபூர்வமாகவுள்ளது.
இந்நிலையில் நாளை வெள்ளிக்கிழமை ஐரோப்பாவெங்கும் முழுமையான சூரிய கிரகணம் கவனிக்கப்படவுள்ளது. மேற்படி சூரிய கிரகணத்தை பிரித்தானியா மற்றும் வட ஐரோப்பாவிலுள்ள ஸ்கான்டினேவியா பகுதிகளில் கவனிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குப்பின் மத்திய ஐரோப்பாவில் 2081 ஆம் ஆண்டும் பிரித்தானியாவில் 2090 ஆம் ஆண்டும் முழுமையான சூரிய கிரகணம் தோன்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment