Thursday, 19 March 2015

அஜித்தின் மகள் நயன்தாராவின் மகளா..?


தலைப்பை படித்ததும் ரசிகர்கள் ஏதேதோ நினைப்பார்கள்.. அப்படியெல்லாம் ஏதும் இல்லை.. செய்தியை படிங்க தெரியும். அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் என்னை அறிந்தால். ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படத்தில் அஜித்தின் வளர்ப்பு மகளாக நடித்தவர் அனிஹா சுரேந்திரன்.
இவர் தற்போது நயன்தாராவிற்கும் மகளாக நடித்து வருகிறார். தமிழில் அரை டஜன் படங்களில் நடித்து வரும் நயன்தாரா மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக ’ராஸ்கல் தி பாஸ்கர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப்படத்தில் தான் நயன்தாராவுக்கு மகளாக நடிக்கிறார் அனிஹா. இந்த படத்தை சித்திக் இயக்கிவருகிறார். இவர் விஜய் நடித்த காவலன் படத்தை இயக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

No comments:

Post a Comment