2015 உலகக் கோப்பை போட்டி தொடரின் இரண்டாவது கால் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஆடி வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் நிதானமான ஆட்டத்தினை ஆடினர்.
ரோகித் சர்மா முதல் பந்திலேயே ஃபோர் அடித்து ரசிர்கர்களை உற்சாகப் படுத்தினார். இந்த இணை முதல் பத்து ஓவர்களில் இந்திய அணிக்கு 51 ரன்கள் எடுத்துக் கொடுத்தது. இந்திய அணியின் ரன் எண்ணிக்கை 75 ஆக இருந்த போது ஷிகர் தவான்(30 ரன்கள்) ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார். அடுத்த ஓவரிலேயே விராட் கோலி 3 ரன்களுடன் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.
அடுத்து இறங்கிய ரஹானேவும் 19 ரன்கள் அடித்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 28 ஓவர்களுக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
எனினும் தொடர்ந்து இறங்கிய சுரேஷ் ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்த ரோகித் ஷர்மா அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். சீரான இடைவெளியில் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினர்.
இவர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி அடுத்த 12 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது. நிதனமாகவும் அதிரடியாகவும் விளைடிய ரோகித் சர்மா 108 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். அதே நேரம் ரெய்னாவும் 46 பந்துகளில் தந்து அரை சதத்தை நிறைவு செய்தார்.

No comments:
Post a Comment