வாய்ப்பு இல்லாமல் இந்திய அணியால் ஓரம் கட்டப்பட்டுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்குக்கு இந்த மாத இறுதியில் திருமணம் நடைபெறவுள்ளதாம். பாலிவுட் நடிகை கீதா பசாராவை தான் அவர் மணக்கவிருக்கிறாராம்.
கீதா பசாரா “தில் தயா ஹய்” என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரு சில இந்தி மற்றும் பஞ்சாபி படங்களில் நடித்துள்ளார். ஹர்பஜனும்,கீதாவும் நீண்ட காலமாக காதலித்து வருவதாக அவ்வப்போது மீடியாக்களில் செய்தி வருவது உண்டு. ஆனால் இதனை இருவருமே மறுத்து வந்தனர்.
எனினும் ஹர்பஜன் ஆடும் போட்டிகளை காண கீதா வருவது உண்டு. ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்பஜன் சிங் விளையாடும் போது கீதாவும் உடன் வருவார் தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் இவர்கள் திருமணத்தை நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனராம்.

No comments:
Post a Comment