ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ள ’ரொம்ப நல்லவன்டா நீ’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் கவர்ச்சி நடிகை சோனா.
அவர் பேசும்போது இந்த படத்தில் எனக்கும் ஒரு ரோல் கொடுத்து நடிக்க வச்சுருக்காங்க. படம் முடிஞ்ச ரெடியானதும் என்னை பார்க்க கூப்பிட்டாங்க. நான் என் போர்ஷன் வரைக்கும்தான் பார்ப்பேன். என்னை கடைசி வரைக்கும் இருக்கணும்னு கட்டாயப்படுத்தக் கூடாதுன்னு சொல்லிட்டுதான் படம் பார்க்கப் போனேன்.
படம் ஓட ஓட முழு படத்தையும் ரசிச்சு பார்த்தேன். படம் முடிஞ்சதும் இந்த படத்தை எங்கிட்ட கொடுத்துருங்க. நான் ரிலீஸ் பண்ணிக்கிறேன்னு சொல்லி, ஒரு விலையும் பேசுனேன். ஆனால் இந்த படத்தை என்னால ரிலீஸ் பண்ண முடியல. காரணம் யார்னு இங்க சொல்லணும்னு தோணுது.
ஆனால் வேணாம். எனக்கு வர்ற கோபத்துக்கு அவன ஏதாவது செய்யணும்னு தோணுது.. என்று ஆத்திரப்பட்டு பேசிவிட்டு கீழே இறங்கினார். ஆனால் மீடியா அவரை விடாமல் யார் அவர்..? என்ன காரணம்? என்று துறுவிதுறுவி கேட்டப்படி ரவுண்டு கட்டினர்.
அவர் வேணாம்… இப்ப வேணாம்… சமயம் வரும்போது நானே சொல்றேன் என்றார். கடைசியாக அவனை விடமாட்டேன் என்றபடி கிளம்பினார். ஆனால் இயக்குநர் வெங்கட் பிரபுவைத்தான் அவர் அப்படி கூறியதாக அங்கிருந்தவர்கள் முணு முணுத்துக்கொண்டார்கள். அவர்தான் சோனாவிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டாராம்.

No comments:
Post a Comment