’ஐ’ படத்திற்கு பிறகு எமி ஜாக்ஸன் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கியது.
இப்படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் உதயநிதி, எமியுடன் நடிகர் கருணாவும் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது ஒரு நாள் கேரள மலையில், நெங்குத்தான இடம் ஒன்றில் ஏறும்போது நடிகை எமி ஜாக்ஸன் தடுமாறி கீழே சறுக்கிவிட்டாராம். உடனே காமெடி நடிகர் கருணா அவருக்கு கைகொடுத்து தூக்கியிருக்கிறார்.
இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு கருணாவுக்கு டுவீட் மூலம் நன்றி தெரிவித்திருக்கிறார் எமி. இதனை வேடிக்கையாக உதயநிதியும் ‘‘நேற்று எமி ஜாக்ஸனை காப்பாற்றினார் கருணா. அவர் தான்உண்மையான ஹீரோ” என டுவீட் செய்திருக்கிறார்.

No comments:
Post a Comment