Wednesday, 4 March 2015

பீதியில் நடிகைகள்.. ஊசிப்போட்டுக்கொண்ட த்ரிஷா..


த்ரிஷா தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக அப்பாடக்கர் படத்தில் நடித்து வருகிறார் என்பதை அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களிடையே பீதியை கிளப்பியது. தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களை பன்றிக் காய்ச்சல் மிரட்டி வருகிறது.
இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 1000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் பன்றிக் காய்ச்சல் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமீபத்தில்கூட பாலிவுட் நடிகை சோனம் கபூர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
தற்போது அவர் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் நம்மூர் நடிகைகள் பலருக்கும் பன்றி காய்ச்சல் வந்துவிடும்மோ என்ற பீதி உள்ளது. இந்நிலையில் தான் த்ரிஷா மாஸ்க் அணிந்த படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பீதியை கிளப்பினார். இதை பார்த்த பலரும் அவருக்கும் பன்றி காய்ச்சல் வந்துவிட்டதோ என்று பதறிவிட்டனர்.
ஆனால் அவர் தனக்கு ஒன்றும் இல்லை, நலமாக இருப்பதாகவும். முன்னெச்சரிக்கையாக தான் மாஸ்க் அணிந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தற்போது பன்றி காய்ச்சல் வராமலிருப்பதற்கான தடுப்பூசியையும் த்ரிஷா போட்டுக்கொண்டார். இதற்கான படங்களை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment