Thursday, 19 March 2015

ரெண்டு பேரும் இப்படி பண்றீங்களே..? சல சலக்கும் கோடம்பாக்கம்..!


சூது கவ்வும், ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் பாபி சிம்ஹா. அதுவும் ஜிகர்தண்டா படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இதுவரை துணை நடிகராக இருந்த பாபி சிம்ஹாவை ஹீரோவாக பிரமோஷன் பண்ணிய படம் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’. சில வருடங்களாக முன்னேற முடியாமல் கிடந்த படத்தை இப்போது தூசு தட்டி பாலீஷ் போட்டுவிட்டார்கள்.
சிம்ஹாவின் மார்க்கெட்டும் தற்போது நல்ல நிலையில் இருப்பதால் படத்திற்கும் நல்ல என்கொயரி. இந்த நேரத்தில்தான் பேசிய சம்பளத்தை விட 25 லட்சத்தை எக்ஸ்ட்ராவாக கொடுத்தால்தான் டப்பிங் பேசுவேன் என்கிறாராம் அவர். அதேபோல இன்னொரு பஞ்சாயத்து.
இப்போது கோடம்பாக்கத்தின் வளர்ந்து வரும் நாயகியான ஸ்ரீதிவ்யா நடித்த காட்டுமல்லி என்ற படத்தையும் தூசு தட்டுகிறார்கள். ஆனால் தற்போது அவரின் மார்கெட் உயர்ந்து உள்ளது என்பதால் நடித்து கொடுக்க, பல லட்சங்களை எக்ஸ்ட்ரவாக கேட்கிறாராம். இதனால் கோடம்பாக்கமே கொஞ்சம் வளர்ந்ததும் இவர்கள் இப்படி பண்றாங்களே என்று சலசலக்கிறதாம்.

No comments:

Post a Comment