நீ தானே என் பொன்வசந்தம், வீரம், ஜில்லா ஆகிய படங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்தவர் வித்யுலேகா ராமன்.
இவர் சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘என்னை அறிந்தால் படத்திற்காக நான் அஜித் சாருக்கு வாழ்த்து தெரிவித்தேன், அதற்கு இன்று அஜித் எனக்கு “வேலைப்பளு காரணமாக என்னை பார்க்க முடியவில்லை, தகவலை தாமதமாக உங்களுக்கு அனுப்பியதற்கு மன்னியுங்கள்”’என்று கூறியுள்ளார் என டுவிட் செய்திருந்தார்.
இது மட்டுமில்லாமல் மேலும் ‘அவரிடம் இருந்து அனைத்து நடிகர்களும் இந்த பணிவை கற்றுக்கொள்ள வேண்டும், இதனால், தான் இவர் இந்த உயரத்தில் இருக்கிறார்’ என டுவிட் செய்துள்ளார்.
ஏற்கனவே அஜித்தை பல நடிகைகள் புகழ்ந்து தள்ளுவதுடன் அவருடன் நடிக்க வேண்டும் என்று கனவு கண்டு வருகின்றனர். அதில் பிந்து மாதவியும் ஒருவர். தற்போது அவருடைய ஆசை விரைவில் நிறைவேற இருக்கிறது. தற்போது இந்த லிஸ்டில் இவரும் இணைந்துள்ளார். ஆனால் இவர் கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் அவர் படத்தில் தலையை காமித்தால் போதும் என்று சொல்வார் போல..

No comments:
Post a Comment