Tuesday, 3 March 2015

டூ வீலர் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்!!


கடந்த தலைமுறையை விட இந்தத் தலைமுறையினரிடையே டூ வீலரின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. ஏனெனில் அந்தளவுக்கு வங்கிகள் கடன் கொடுத்து டூ வீலர் வாங்குவதை எளிதாக்குகின்றன. எளிதில் டூ வீலர் வாங்கத் தெரிந்த நமக்கு அதனை பராமரிக்கத் தெரிவதில்லை.
டூ வீலர் பயன்படுத்துபவர்களுக்காக சில குறிப்புகள்…
முதலில் வாகனம் Second hand-ல் வாங்கும் போது அல்லது விற்கும் போது கவனிக்க வேண்டியன.
நீங்கள் வாகனத்தினை விற்க/வாங்கும்போது. அதனை விற்பவர்/வாங்குபவர் குறித்த முழு விவரத்தையும் தெரிந்து கொண்டு வாங்குவது மிகவும் நல்லது. குறிப்பாக அவருடைய அடையாள அட்டை, இருப்பிட ஆதாரம் ஆகியவற்றின் நகல்களை வாங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில், வாங்கியவர் உங்களின் வாகனத்தினை தவறான வழியில் பயன்படுத்தி விட்டு காவலர்களிடம் உங்கள் வாகனம் மாட்டிக் கொண்டால் பிரச்சனை உங்களுக்கு தான்.
வாகனம் ஓட்டுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில..
வாகனத்தில் ஓட்டுநர் உரிமம் காப்பீட்டு நகல்கள், மற்ற வாகனம் சம்மந்தப்பட்ட முக்கிய தாள்களை பத்திரமாக வாகனத்திலேயே வைத்திருக்கவேண்டும். வாகனக் காவலர் எப்போது நம் வாகனத்தை மடக்கிக்கேட்டாலும் காட்த்தயாராக இருக்கவேண்டும். இன்று அதிவேக இருசக்கர வாகனம் வந்துவிட்டது. 100 கிலோ மீட்டருக்குக் குறையாமல் செல்லும் இந்த வாகனத்தை ஓட்டுபவர் பெரும்பாலோருக்கு நிதானமில்லை. பல விபத்துக்களில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. நன்கு ஓட்டத் தெரிந்தவர்களே இந்த மாதிரி வாகனத்தைக் கையாள வேண்டும்.
எப்படிப்பட்ட பிரச்சனைகள் வரும் என்று கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
பலர் மண்ணெண்ணெய் ஊற்றி வைத்த கேன்களில் பெட்ரோல் பிடித்துச் சென்று டூ வீலர்களில் ஊற்றுகின்றனர். அந்த கேனில் இருக்கும் சிறு அளவு மண்ணெண்ணை கலந்த பெட்ரோலை வாகனத்திற்கு ஊற்றி ஓட்டும் போது முதலில் இருசக்கர வாகனத்தின் போர் அடிபடும். பின்பு வாகனம் அதிக கம்பரசர் ஆகி நம் வாகனம் ஓடாது.
அதேபோல சாலைகளில் பள்ளங்களிலோ, மேடுகளிலோ, வாகனத்தை வேகமாக இயக்கிச்செல்லும் போது நம் வாகனத்தில் ஆயில் கசிவு ஏற்படலாம். ஏன் பிரேக் பிடிக்காமலும் போகலாம். சில நேரங்களில் வாகனத்தின் சிறு பாகங்கள் உதிர்ந்து விடக்கூடும். ஆதலால் நட்டு, போல்டுகளை நன்கு இறுக்கிய நிலையில் வைத்துக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும். இ
ன்று ஓடும் இரு சக்கர வாகனம் அனைத்தையும் 3 மாதத்திற்கு ஒரு முறை வாகனத்தைச் சுத்தப்படுத்தி சரி செய்ய வேண்டும். அவ்வாறு சரி செய்யாவிடில் கிளட்ச் போன்ற பாகங்கள் பழுதாகும். இன்று தமிழ்நாட்டில் இரு சக்கர வாகனத்தை 5% பேர் மட்டும் சரியாகப் பராமரிக்கிறார்கள். மீதமுள்ள 95% பேர் ஏனோ, தானோ என்று கடமைக்கு வாகனத்தைப் பராமரிக்காமல் ஓட்டிச்செல்வதால் பல விபத்துக்கள் இன்று ஏற்படுகிறது.

No comments:

Post a Comment