உலகக் கோப்பை தொடரின் 27வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதுகிற ஆட்டம் ஒவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில், வங்கதேச அணி ஸ்காட்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத இரு அணிகளும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கின. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 50 ஓவர்கள் வரை நிலைத்து ஆடி 318 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் கோட்செர் 198 பந்துகளில் 156 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் மிக சொற்ப ரன்களே எடுத்தனர். இறுதியில் ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி வீரர்கள் நிதானமாக ஆடி 48.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 422 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வங்கதேச அணியின் துவக்க ஆட்டக்காரர் இக்பால் அதிகபட்சமாக 95 ரன்கள் எடுத்தார்.
மேலும், மஹ்முதுல்லா 62, ரஹீம் 60, ஹாசன் 52 மற்றும் ரஹ்மான் 42 ரன்கள் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.
எனினும் அதிரடியாக ஆடிய ஸ்காட்லாந்து வீரர் கோட்செர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments:
Post a Comment