Wednesday, 4 March 2015

இவர் நயன்தாராவின் முன்னாள் காதலன் என்று யாருக்கு தெரியும்..?


தலைப்பை பார்த்ததும் எல்லோருக்கும் ஒரு ஷாக் இருக்கும். இந்த நயன்தாராவுக்கு இதே வேலையா போச்சுப்பா ஏற்கனவே மூன்று, நான்கு காதால். இப்போது இதுவேறயா என்றுகூட ஒரு சிலர் நினைப்பார்கள். ஆனால் இதெல்லாமே படத்தில் தான்.
ஒருகாலத்தில் தெலுங்கு இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கிய சில படங்களில் அவரது ஆஸ்தான வில்லனாக, கதாநாயகனாக நடித்தவர் ஜே.டி.சக்கரவர்த்தி. இவர் தமிழில் ’கச்சேரி ஆரம்பம்’ 'சமர்' 'அரிமா நம்பி' போன்ற படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். தற்போது இவர்தான் நயன்தாராவின் முன்னாள் காதலனாக ஒரு படத்தில் நடிக்கிறார்.
மலையாளத்தில் சித்திக் இயக்கத்தில் உருவாகிவரும் 'பாஸ்கர் தி ராஸ்கல்' என்ற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அந்தப்படத்தில் தான் நயன்தாராவின் முன்னாள் காதலனாக நடிக்கிறார் ஜே.டி.சக்கரவர்த்தி. இன்னும் சொல்லப்போனால் மம்முட்டிக்கு வில்லன்.
மெகாஸ்டார் மம்முட்டி, நயன்தாராவுடன் நடிப்பது சக்கரவர்த்திக்கு ஒரு பக்கம் சந்தோசம் என்றால், இந்தப்படத்தில் அவரது கதாபாத்திரத்தை சித்திக் வடிவமைத்திருக்கும் விதம், அவருக்கு இன்னும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறதாம்.

No comments:

Post a Comment