ஸ்டார் விஜய், 2015ம் ஆண்டிற்கான ”சூப்பர் சிங்கர்” உலக சுற்று பயணத்தை நடத்த உள்ளது. இந்நிகழ்வு வெம்லி, SSE அரினாவில் வரும் வெள்ளி, ஏப்ரல் 3, 2015 அன்று நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் நடிகர் தனுஷ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஸ்ரீனிவாஸ், உண்ணிகிருஷ்ணன், அனிருத் ஆகிய தமிழ் இசைத் துறைப் பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இவர்களுடன் சூப்பர் சிங்கர் ஜூனியரில் இறுதிச் சுற்றுக்குத் தேறிய, ஜெஸ்ஸிகா, ஸ்பூர்த்தி, ஹரிப் பிரியா, பரத், ஷ்ரீஷா மற்றும் அணுஷ்யா ஆகியோரும் பங்கு கொள்கின்றனர்.
இவர்கள் மட்டுமல்லாது, முந்தைய சூப்பர் சிங்கர் சீசன் பிரபலங்களான, திவாகர், பூஜா மற்றும் பிரவீன் சைவி ஆகியோரும் பங்கேற்கின்றனர். இங்கிலாந்தில் உள்ள தமிழர்கள் அனைவரையும் இந்நிகழ்வு சேரும் வண்ணம், விஜய் டிவி புகழ் திவிய தர்ஷினியும், கோபினாத் அவர்களும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கின்றனர்.
இந்நிகழ்வு சில வாரங்கள் கழித்து ஸ்டார் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது. நிகழ்விற்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
புதிதாக VIJAY TV viewing card வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்நிகழ்விற்கான டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு VIJAY TV viewing card £30 மதிப்பிலான 2 டிக்கெட்டுகள் இலவசமாக் வழங்கப்படுகின்றன.
VIJAY TV viewing cardஐ உடனே வாங்குவதற்கு இங்கே சொடுக்கவும்

No comments:
Post a Comment