Friday, 20 March 2015

சரத்குமாரை கேவலமாக திட்டிய மன்சூர் அலிகான்..!


ஒரு கால கட்டத்தில் வில்லனாக வந்து ரசிகர்களை மிரட்டியவர் மன்சூர் அலிகான்.
தற்போது அவருக்கு பெரிய படவாய்ப்புகள் இல்லை என்றாலும் ஏதாவது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி நான் இருக்கிறேன் என்பதை ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.
சமீபத்தில் லிங்கா பட விநியோகஸ்தர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துக்கொண்ட மன்சூர் அலிகான் சூப்பர் ஸ்டார் ரஜினியை பொது இடத்திலேயே கேவலமாக திட்டீனார். அதைத்தொடர்ந்து சமீபத்தில் தமிழகத்தில் முன்னணி வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த போது பல சர்ச்சைகுரிய கருத்துக்களை கூறியுள்ளார்.
அதில் மன்சூர் அலிகான் சில நாட்களுக்கு முன் அதிரடி என்ற படத்தை எடுத்ததாகவும், அதை சிலர் திட்டமிட்டே தடுத்து நிறுத்தியதால் தனக்கு ரூ 25 லட்சம் நஷ்டமடைந்து விட்டது என்று கூறியுள்ளார்.
இது குறித்து நடிகர் சங்க தலைவரிடம் கேட்கலாமே என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு ‘அவருக்கு பனியன், ஜட்டி விளம்பரத்தில் நடிக்கவே, நேரம் சரியாக உள்ளது, இதை எங்கு வந்து பார்க்க போகிறார்கள்’ என வெளிப்படையாக பேசியுள்ளார்.

No comments:

Post a Comment