Tuesday, 24 March 2015

சிங்கபூருக்கு கறுப்பு தினம்..!- ரஜினிகாந்த்


சிங்கப்பூரின் தேச தந்தை என அழைக்கப்படும் அந்நாட்டின் முதல் பிரதமர் லீ க்வான் யூ நேற்று மரணமடைந்தார். இந்திய பிரதமர் மோடி உட்பட பல உலக தலைவர்கள் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் தனக்கு மிகப் பிடித்த தலைவரான லீ க்வான் யூ மறைவிற்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். என் அபிமான தலைவரை இழந்த நாள் எனக்கு கறுப்பு தினமாகும். சிங்கப்பூர் மக்களுக்கு என் ஆழந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே லீ க்வான் யூவை பற்றி தனது பல பேட்டிகளில் உயர்வாகப் பேசியுள்ளார் ரஜினி.
மக்கள் மீது அக்கறை கொண்ட அவரைப் போன்ற சிறந்த தலைவர் இங்கு உருவானால், அவருடன் இணைந்து அரசியல் செய்வேன் என்று ரஜினி கூறியிருந்தார். நேற்று லீ க்வான் யூ மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தார் ரஜினி.
அதில், "என் அபிதான தலைவராகிய லீ க்வான் யூ மறைந்த இந்த நாள் உண்மையாகவே கறுப்பு தினம். சிங்கப்பூர் மக்களுக்கு என் அனுதாபங்கள். புதிய பாதை அமைத்துக் கொடுத்த அவரது மறைவு உண்மையான இழப்பு," என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment