Tuesday, 24 March 2015

மோடியையும், ஜெ.,வையும் ஒரு பிடி பிடிச்ச குஷ்பு: அடுத்த முதல்வர் வேட்பாளர்??


நிலம கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழக காங்கிரஸ் சார்பில் மாவட்டம் வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகையும், தமிழக காங்கிரஸின் நட்சத்திர உறுப்பினருமான குஷ்பு கலந்து கொண்டார்.
திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்ட கூட்டத்துக்கு, குஷ்புவும், ராணி வெங்கடேசனும் தலைமை தாங்குவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திருச்சி காங்கிரஸாரைப் பொருத்தவரை தலைமை தாங்கியது குஷ்பு தான் என்பது போல் கொண்டாடினர்.
அவருக்கு வரவேற்பிலிருந்து, அவர் பேசியதை படம் பிடித்தது வரை குஷ்பு மீது மட்டும் சிறப்பு கவணம் இருந்தது. இந்த கூட்டத்தில் குஷ்பு மத்திய மாநில கட்சிகளை கிழி கிழி என கிழித்ததைக் கண்டு அசந்து போன திருச்சி காங்கிரஸ் பிரமுகர் வேலுச்சாமி குஷ்பு தான் தமிழக காங்கிரஸின் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்று மேடையிலேயே தெரிவித்தார்.
திருச்சி ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் குஷ்பு பேசிய பேச்சை நீங்களே பாருங்கள்:
நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றும் அன்று பாராளுமன்றத்தில் இடைவேளை கொடுத்திருந்தார்கள். அதுவரை அந்த மசோதாவை எதிர்த்துக்கொண்டிருந்த தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு, அந்த அரைமணி நேரத்தில் இந்த மசோதாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளது. அது எனக்கு பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பெங்களுரில் நடந்து வரும் வழக்கிற்கும், இந்த மசோதாவை ஆதரிப்பதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது. எனக்கு மட்டும் இல்லீங்க. தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் இந்த சந்தேகம் இருக்கு. உங்களோட அனுமதி இல்லாமல் உங்கள் இடத்தை எந்த நேரமும், எப்ப வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வதற்கு பேர்தான் நில கையகப்படுத்தும் சட்டம்.
இதனை சட்டம் என்று சொல்லுகிறார்கள். இதற்கு நான் திருட்டு சட்டம் என்று சொல்கிறேன். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, இந்த சட்டம் சில திருத்தங்களுடன் இருந்தது. விவசாயிகளின் நிலத்தை எடுக்க மாட்டோம் என்று சொல்லி இருந்தது. ஆனால் இந்த மோடி ஆட்சிக்கு வந்த உடனேயே அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என்று பேசினார்.
தனியார் நிறுவன முதலாளிகளுக்காக இந்த சட்டத்தை சவுகரியம் செய்து கொடுக்கிறார். இந்தப் பகுதிகளை நாம் டெல்டா பகுதி என்று சொல்லுகிறோம். இது கொஞ்சள் நாள் கழித்து அதானி டெல்டா, மோடி டெல்டா, அம்பானி டெல்டாவாக மாறிவிடும். எல்லையில் போராடுகிற ராணுவ வீரனும், நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயியும் ஒன்றுதான்.
46 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒரு ஏக்கர் ஒரு ருபாய்க்கு இந்த மோடி, அதானிக்கு கொடுத்துள்ளார். எங்கேயாவது இந்த அநியாயம் நடக்குமா. கருப்பு பணத்தை வெளியில்கொண்டு வந்து தலைக்கு 15 லட்சம் ரூபாய் வங்கியில் போடுவதாக கூறினார். எங்களுக்கு அதெல்லாம் வேண்டாம். ஒரு ஏக்கர் ஒரு ருபாய்க்கு கொடுக்க சொல்லுங்க கொடுப்பீங்களா.
ஒரு ஏக்கர் கொடுத்தால் ஒரு கோடி சம்பாதித்து விடுவோம் என்று கூறினார். தொடர்ந்து தமிழ்நாட்டு எம்.பிக்களை அட்டாக் செய்த குஷ்பு, நாடு எவ்வளவோ முன்னேற்றத்தில் போய்க்கிட்டு இருக்கு. ஆனால் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்களை நினைத்தால் ஒரே சிரிப்பா இருக்கு. கேவலமா நினைக்கிறார்கள். பேசப்போற திட்டங்களையும், அறிக்கைகளையும் வைக்க வேண்டிய டேபிள் மேல, படத்தை வைக்கிறார்கள்.
அந்த படத்தை கும்பிட்டு பேச ஆரம்பிக்கிறாங்க. கேட்டால் அம்மா படம் என்கிறார்கள். அம்மா படம் என்றால் வீட்டல் வைக்க வேண்டியதுதானே என்று அங்க இருக்கக் கூடிய அதிகாரிகள் சொல்கிறார்கள். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி, அவருக்கு தமிழக அமைச்சர்கள் கோயில் கோயிலாக தண்டனையில் இருந்து விடுபட வேண்டும் என்று கும்புடுறாங்க. நான் நினைக்கிறேன், ஐயா சாமி இனிமே தயவு செய்து அவங்க வெளியே வந்திடக் கூடாது.
அவங்களை உள்ளேயே இருக்க வையுங்க. அந்த அம்மாவ பாத்தா குனிந்தே நிக்கணும், இப்ப நிமிந்து நிக்கிறோம், அப்படி சொல்லியே அதிமுகவினர் கோயில் கோயிலாக கும்புடுறாங்கன்னு நினைக்கிறேன்.

No comments:

Post a Comment