Tuesday, 24 March 2015

57 மாடி அப்பார்ட்மெண்ட்டை 19 நாட்களில் கட்டி சாதனை!!


புதிது புதிதாக ஏதேனும் செய்வதில் கைதேர்ந்தவர்கள் சீனர்கள். அந்த பட்டியலில் புதியதாக சேர்ந்துள்ளது இந்த 19 நாட்களில் கட்டப்பட்ட 57 மாடி கட்டிடம்.
சீனாவின் ஹுனான் மாவட்டத்தின் தலைநகர் சங்ஷாவில் ஒரு கட்டுமான நிறுவனம் 19 நாட்களில் 57 மாடி கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை கட்டியுள்ளது.
இந்த கட்டிடத்தின் முதல் மூன்று அடுக்கு முழுவதும் செங்கலால் ஒரே நாளில் கட்டப்பட்டுள்ளது. பின்னர், முன்னரே தயார் செய்யப்பட்டிருந்த கான்கிரீட் துண்டுகள் கொடுவரப்பட்டு கிரேன் மூலம் பொருத்தப்பட்டு 57 மாடிகளுக்கான பில்லர்கள் அமைக்கப்பட்டன.
இரவு, பகல் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு 19 நாட்களில் இதனை கட்டி முடித்துள்ளனர். இதற்கு தேவையான உபகரணங்கள் 15ஆயிரம் லாரி லோடுகள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த 57 மாடி அப்பார்ட்மெண்ட்டில் 800 வீடுகள் அமைந்துள்ளது. இங்கு சுமார் 4000 பேர் வசிக்கலாம். இதே நிறுவனம் ஏற்கனவே இதே பகுதியில் 15 நாட்களில் 30 மாடி கட்டிடத்தை கட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment