Tuesday, 24 March 2015

ஐ ஃபோனை பறித்த அம்மா!! பழி வாங்க 12 வயது மகள் செய்த காரியம்!!?


ஸ்மார்ட்ஃபோன் மோகம் பிடித்து திரியும் இன்றைய இளைஞர்கள் முதல் சிறுசுகள் வரை எந்த அளவிற்கு பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கு உதாரணமாக அமெரிக்காவில் ஒரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது.
12 வயது பெண் ஒருவர் தனது அம்மவை கொல்ல முயற்சி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். அவரின் ஐ ஃபோனை அம்மா பறித்து வைத்துக் கொண்டதால் ஆத்திரத்தில் இப்படி செய்துள்ளாராம்.
ஒருமுறை அந்த பெண் தனது அம்மாவிற்கு கொடுத்த பானத்தை அருந்தி மயக்கமடைந்துள்ளார். ஆனால், மகள் பாத்திரத்தை சரியாக சுத்தப்படுத்தாமல் அருந்தியிருப்பார் என்று கருதி விட்டுவிட்டார். ஆனால் மீண்டும் சிறிது நாட்கள் கழித்து மகள் கொடுத்த பானத்தில் வித்தியாசமான வாசனை வர மகளை அழைத்து விசாரித்துள்ளார்.
அப்போது அவரது மகள், அதில் விஷம் கலந்து கொலை செய்ய முயன்றதாக கூறி திடுக்கிட வைத்திருக்கிறார். ஐபோனை பறித்துக்கொண்ட ஆத்திரத்தால் இவ்வாறு செய்ததை அவர் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து அந்த பெண்ணின் அம்மா சிகிச்சைக்காக மருத்துமனை சென்றவர் அங்கிருந்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment