கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றை கத்தியால் குத்திக் கிழித்து அவரது குழந்தையை அகற்றிய குற்றச்சாட்டில் 34 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க கொலராடோ மாநிலத்தில் புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
லோங்வுண்டர் நகரைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணியான 26 வயது பெண்ணை குறிப்பிட்ட பெண் அடித்து உதைத்து கத்தியால் வயிற்றில் குத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்தப் பெண் உடல் நலம் தேறி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பிட்ட பெண் வீட்டிற்குள் வந்து தன்னைத் தாக்கி தனது வயிற்றிலிருந்த குழந்தையை அகற்றியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார். இந்நிலையில் கத்திக் குத்தை நடத்தி விட்டு தலைமறைவாகிய பெண்ணை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட போலிஸார் புதன்கிழமை பின்னிரவு அவரை கைது செய்துள்ளனர். தாக்குதலை நடத்திய பெண்ணினதும் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணினதும் பெயர்கள் போலிஸாரால் இதுவரை வெளியிடப்படவில்லை.

No comments:
Post a Comment