தனுஷ் நடித்த ’3’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இளம் இசையமைப்பாளர் அனிருத். இப்போது முன்னனி இசையமைப்பாளராக அவதாரம் எடுத்து வருகிறார். தற்போது இருக்கும் இசையமைப்பாளர்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவர் யார் என்றால் அது அனிருத் தான்.
அந்த அளவிற்கு இளைஞர்களின் பல்ஸ் தெரிந்து அவர்களை தனது இசையால் ஆடவைத்துவிடுகிறார். குறிப்பாக இவர் இசையமைத்த எதிர்நீச்சல், மான்கராத்தே, வேலையில்லா பட்டதாரி, கத்தி ஆகிய படங்கள் அவரை ரொம்பவே உயரத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. அதனால் அடுத்தபடியாக அரை டஜன் மெகா பட்ஜெட் படங்களுக்கு ஒப்பந்தமாகி இசையமைத்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஒரு தெலுங்கு படத்தில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அனிருத் முதல் முறையாக தெலுங்கு படங்களில் இசையமைக்கப்போகிறார் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். ராம் சரண் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் பெயரிடப்படாத படத்திற்கு அனிருத்தை இசையமைக்க உள்ளார் என்று.
ஆனால் தமிழில் பல படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் அனிருத் தெலுங்கு படத்தின் கம்போசிங்கை தள்ளி வைத்துக் கொண்டே போக ஒரு கட்டத்தில் கடுப்பான இயக்குநர் ஸ்ரீனு வைட்லா அனிருத்தை நீக்கிவிட்டு ஆல் டைம் ஃபேவரைட் தேவி ஸ்ரீ பிரசாத்தை இசையமைப்பாளராக போட்டுவிட்டாராம்.
அதேசமயம் அனிருத், அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கு இசையமைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளது.

No comments:
Post a Comment