முன்னனி ஹீரோக்களுடன் போட்டி போட்டுக்கொண்டு நடித்து வரும் ஹன்சிகா சினிமாவில் ரொம்பவே பிஸியாக இருக்கிறார். தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வரும் அவர் கவர்ச்சியில் இயக்குநர்கள் கேட்கும் படி கதைக்கு என்ன தேவையோ அப்படி நடிக்க தயாராக இருக்கிறேன் என்று அறிக்கை விடுத்திருக்கிறார்.
சினிமாவில் அறிமுகமான போது ஓரளவுக்கு கவர்ச்சியாக நடித்து வந்த ஹன்சிகா சிம்புவை காதலித்த பிறகு கவர்ச்சி கதவுகளை இறுக்கமாக மூடிக்கொண்டார். அதோடு, இந்த அளவுக்கு மேல் நடிக்கக்கூடாது என்று சிம்பு கண்டிஷன் போட்டதால் அந்த கோட்டுக்குள்ளேயே நின்றார் ஹன்சிகா.
இதனால் அப்போதுஅவரை வைத்து படம் இயக்கிய இயக்குநர்கள் டென்சன் ஆகினர். ஆனால், குறுகிய காலத்திலேயே சிம்புடனான காதலை முறித்துக்கொண்ட ஹன்சிகா, பின்னர் தன் மீது அதிருப்தியில் இருந்தவர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியாக கதைக்கு என்ன தேவையோ அப்படி நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நூறு சதவிகிதம் கியாரண்டி கொடுத்து இருக்கிறார்.
தற்போது மீண்டும் அனுஷ்கா, நயன்தாரா, தமன்னா, காஜல்அகர்வால் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதால், போட்டியை எதிர்கொள்ள தயாராகியிருக்கும் ஹன்சிகா, டூ-பீஸ் ரேஞ்சுக்கு ஆடை சுதந்திரம் கொடுப்பதற்கும் ஒரு இயக்குநரிடம் தற்போது ஒப்புதல் அளித்திருக்கிறாராம். இதனால் அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் ஹன்சிகாவின் கவர்ச்சி நெடி இன்னும் தூக்கலாகவே இருக்கும் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment