Wednesday, 25 March 2015

அஜித்தால் ஹோட்டல் முன் குவிந்த ரசிகர்கள்..!


அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ’என்னை அறிந்தால்’ படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று ஓரளவுக்கு நல்ல வசூலை குவித்தது.
இப்படத்தை தொடர்ந்து அஜித் வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். ஆனால் அதற்கு முன்பாக சிறிது நாட்கள் ஓய்வெடுக்க முடிவு செய்தார் அஜித். இந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு சைனஸ் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார்.
தற்போது அஜித் நலமாக இருக்கிறார். உடல் நலம் முழுமையாக தேறி விட்டதால் மறுபடியும் தன் புது மாடல் பைக்கை எடுத்து கொண்டு திருச்சங்கோடு வரை சென்றுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் அஜித்தை காண திரளாக திரண்டு வந்துள்ளனர்.
அஜித் இந்த ஹோட்டலில் தான் தங்கியிருக்கிறார் என அறிந்து அவரை காண பலர் ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்தனர். மேலும், அஜித்தின் புது மாடல் பைக்கை அனைவரும் போட்டோ எடுத்து சென்றனர்.

No comments:

Post a Comment