Wednesday, 25 March 2015

தமிழக பட்ஜெட் 2015-2016!!


2015 – 2016 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியதும் 2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை அளித்தார்.
இதில் குறிப்பிட்ட சில அம்சங்கள் பின்வருமாறு,
பசுமை எரிசக்தி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், உயிரி எரிபொருள் மூலம் (கரும்பு சக்கையை தவிர) உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மீதான வரி விலக்கிக் கொள்ளப்படும்.
அனைத்து வகையான கொசு வலைகளுக்கு தற்போது விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக்கூட்டு வரி முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களில் உள்ள உற்பத்தி அலகு களோடு சிறப்பாகப் போட்டியிட ஊக்குவிக்கும் வகையில், மாநிலங்களுக்கு இடையேயான விற்பனையில் தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி சட்டம் 2006 பிரிவு 19 (2) (வி)ன் கீழ் கொண்டுவரப்பட்ட காப்புரையின்படி 11.11.2013 முதல் விதிக்கப்பட்ட 3 சதவீத உள்ளீட்டு வரி திருப்பம் திரும்பப் பெறப்படும்.
நெய்தலுக்கு முன்பாக நூலுக்கு பசையிடுவது தொடர்பான ஒப்பந்தப் பணிகளுக்கு மதிப்புக்கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
மின்சேமிப்புக்கான கருவிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, அனைத்து வகையான ஒளி உமிழ் டையோடு விளக்குகள் மீது தற்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீத மாக குறைக்கப்படும்.
கைபேசிகள் மீது தற்போது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி 14.5 சதவீதத்திலிருந்து 5 சதவீத மாகக் குறைக்கப்படும்.
ஏலக்காய் மீது தற்போது விதிக்கப்பட்டு வரும் மதிப்புக்கூட்டு வரி 5 சதவீதத் திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்.
காவல்துறைக்கு புதிய கட்டமைப்பு வசதிகளுக்காக 5568 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தீயணைப்பு துறைக்கு 73.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு. நவீனப்படுத்த 10.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பயிர்கடனுக்கு 5500 கோடி ஒதுக்கீடு. உரிய நேரத்தில் கடனை செலுத்துபவர்களுக்கு வட்டியின்றி வழங்கப்படும்.
நீதி நிர்வாக துறைக்கு 809 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment