லுப்தான்சாவின் ஜெர்மன் விங்ஸ் என்ற விமானம் நேற்று ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த விமானிகள் உட்பட 150 பேர் பலியாகியுள்ளனர்.
ஸ்பெயினின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனிக்கு காலை 10 மணி அளவில் புறப்பட்ட அந்த விமானம், 10.53க்கு பிரான்சின் தென் பகுதியில் இருக்கும் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடும் பனி பொழிவு காரணமாக ஹெலிகாப்டர்களை தரையிறக்க முடியவில்லை என்றும், மீட்புபணியினர் மட்டும் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் விபத்துக்கான காரணம் கண்டறியப்படும் என்று விமான நிறுவனம் சார்பில் கூறப்படுள்ளது.
கிளம்பிய சிறிது நேரத்திலேயே 38,000 அடியை சரியாக அடைந்த விமானம், மீண்டும் 6,000 அடிக்கு எப்படி கீழே இறங்கியது என்பது கேள்விக் குறியாக இருக்கின்றது.
மேலும், விமானம் விபத்துக்குள்ளான அந்த மலைத்தொடர் சுமார் 2,000 முதல் 9,000 அடி உயரம் உள்ளதாகும். 8 நிமிடங்களில் விமானத்தின் உயரம் 38,000 த்திலிருந்து 6,000 அடியாக குறைந்துள்ளது எப்படி என்று அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த விமானத்தில் பயணித்தவர்களில் 2 சிறு குழந்தைகள், 15 பள்ளி சிறுவர்கள், 3 விமானிகள், மற்றும் 3 பணியாளர்கள் உட்பட 150பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment