Wednesday, 25 March 2015

‘ஜெர்மன்விங்ஸ்’ விமானத்தில் பயணித்த 15 பள்ளிக்குழந்தைகள்!!?


விபத்துக்குள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடும் பனிப்பொழிவு காரணமாக மீட்பு படையினரின் ஹெலிகாப்டர்கள் இறங்க முடியாமல் மீட்பு படையினர் மட்டும் கீழிறங்கி தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது அந்த கருப்புப் பெட்டியானது சோதனைக்காக பாரிஸ் நகருக்கு அனுப்பப் பட்டுள்ளது. தற்போது அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் குறித்த தகவலை விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த நிறுவனம் அளித்த தகவலின் படி, அந்த விமானத்தில் 15 பள்ளிக் குழந்தைகள், 2 கைக்குழந்தைகளுடன், 6 விமான ஊழியர்கள் உட்பட 150பேர் பயணித்ததாக தெரிகிறது.

No comments:

Post a Comment