Monday, 23 March 2015

நடிகர்களின் சம்பள எவ்வளவு..? முழு விவரம்..!


பொதுவாக தமிழ் நடிகர்களின் சம்பளத்தை அறிந்து கொள்வதில் நமக்கு மிகுந்த ஆர்வம உண்டு. ஏனென்றால் அதன் மூலம் மட்டுமே நாம் நடிகர்களின் மார்க்கெட் நிலவரத்தை அறிந்துகொள்ள முடியும்.
தமிழ் சினிமாவின் பட்ஜெட் இன்று எங்கேயோ போய்விட்டது. அதிலும் தமிழ் சினிமா நடிகர்களின் சம்பளம் கற்பனைக்கும் எட்டாத அளவில் உள்ளது. படம் வெற்றி அடைந்தால் சம்பளத்தை கூட்டும் நடிகர்கள், படம் தோல்வி அடைந்தால் சம்பளத்தை குறைப்பதில்லை. தமிழ் நடிகர்களின் சம்பளம் ரகசியமாக இருந்தாலும் தோராயமாக நாம் அவற்றை கணக்கிட முடியும்.
தற்போதைய நிலையில் 100 படங்கள் ரிலீசானால் அதில் 10 படங்கள்தான் லாபம் சம்பாதிக்கிறது. மீதமுள்ள 90 படங்களின் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைகிறார்கள். அல்லது சினிமாவை விட்டே போய்விடுகிறார்கள். ஆனால் ஹீரோக்களின் சம்பளம் மட்டும் கோடிக் கணக்கில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதுவும் கோடிகளில் புரளுகிறார்கள். சரி அதெல்லாம் நமக்கு எதுக்கு செய்திக்கு போவோம்..
சமீபத்தில் முன்னணி இணையத்தளம் ஒன்று இவர்களின் சம்பள விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு..
ரஜினிகாந்த்- ரூ 40 கோடியில் இருந்து 60 கோடி வரை வாங்குகிறாராம்.
கமல்ஹாசன்- ரூ 25-யிலிருந்து 30 கோடி வரை
அஜித்- ரூ 20-யிலிருந்து 25 கோடி வரை
விஜய்- ரூ 20-யிலிருந்து 25 கோடி வரை
சூர்யா-ரூ 18-யிலிருந்து 20 கோடி வரை
விக்ரம்-ரூ 12-யிலிருந்து 15 கோடி வரை
தனுஷ்- ரூ 8-யிலிருந்து 10 கோடி வரை
சிவகார்த்திகேயன்- ரூ 5-யிலிருந்து 7 கோடி வரை
கார்த்தி- ரூ 6-யிலிருந்து 8 கோடி வரை
விஷால்- ரூ 5 கோடி சிம்பு- ரூ 4 கோடி
ஆர்யா- ரூ 3 கோடி
ஜெயம் ரவி- ரூ 3 கோடி
ஜீவா- ரூ 2.5 கோடி
சித்தார்த்- ரூ 2.5 கோடி
விஜய் சேதுபதி- ரூ 2 கோடி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது அவர்கள் கொடுத்த ஹிட் படங்களை பொருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment