Monday, 23 March 2015

பாம்புடன் செல்ஃபி!!! தன் பங்குக்கு படமெடுத்து போட்டுத்தள்ளிய நாகம்!!


போதையில் பாம்புடன் செல்ஃபி எடுத்த நபர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூர் தாராபுரத்தை அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகுமார். கூலித் தொழில் செய்கிறார். எப்போதும் போல வேலைவிட்டு திரும்புகையில் அன்று குடித்து விட்டு வந்துள்ளார் இவர்.
வெளிலேயே படுத்துக் கொண்ட அவர் மீது நள்ளிரவில் நாகப்பாம்பு ஏறியுள்ளது. தூக்கத்திலும் போதையிலும் இருந்த சந்திரகுமார் புரண்டுபடுத்துள்ளார். மீண்டும் ஏதோ ஊர்வது போல தோன்ற விழித்துப் பார்த்தால் அவர் மீது பாம்பு ஒன்று படமெடுத்தவாறு இருந்துள்ளது.
போதையில் இருந்த சந்திரகுமார் பதறாமல் விளையாட்டாக அதனை பிடித்து தன்னுடன் சேர்த்து வைத்து செல்ஃபி புகைப்படம் எடுத்து நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் மிரண்டுபோன பாம்பு அவரை தீண்டியுள்ளது. எதேச்சையாக வெளியில் வந்துள்ள சந்திரகுமாரின் மனைவி, கணவர் வாயில் நுரையுடன் இருப்பதைப் பார்த்து கூச்சலிட்டிருக்கின்றார். அக்கம்பக்கத்தினர் சேர்ந்து மருத்துவமனைக்கு அளைத்து செல்லப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவருக்கு திருமணமாகி முழுதாக ஒரு வருடம் கூட ஆகவில்லை என்பது தான் மிகவும் கொடுமை.

No comments:

Post a Comment