Tuesday, 24 March 2015

மார்க்கெட் இல்லாத சிம்பு.. டூயட் பாட துடிக்கும் இரண்டு நடிகைகள்..!


சிம்பு நடிப்பில் ஒரு படம் வெளிவந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது.
அவர் நடித்த வேட்டை மன்னன், வாலு படங்கள் என்ன ஆனதென்றே தெரியவில்லை. வாலு படம் மட்டும் விரைவில் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு நடித்த இது நம்ம ஆளு படம் இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. அதோடு கெளதம் மேனன் இயக்கத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த படத்தை அச்சம் என்பது மடமையடா என்ற பெயரில் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. செல்வராகவனும், சிம்புவும் முதன் முதலாக இணையும் இப்படம் பக்கா ஆக்‌ஷன் மற்றும் காதல் படமாம். செல்வராகவன் இதுவரை இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவகையில் இப்படம் தயாராக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் என்பது ஏற்கெனவே உறுதியான விஷயம். செல்வராகவன் உருவாக்கியுள்ள இப்பட கதையில் இரண்டு கதாநாயகிகள் கேரக்டர்கள் உள்ளனவாம். அதனால் இன்னொரு கதாநாயகி கேரக்டரில் டாப்ஸியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார் செல்வராகவன்.
டாப்ஸி பெரிய சம்பளம் கேட்க, அதற்கு ஓகே சொல்லப்பட்டதை அடுத்து இப்படத்தில் நடிக்க டாப்சி ஒப்புக்கொண்டுள்ளாராம். அவர்கள் இருவருமே எப்போது இந்த படம் தொடங்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்களாம். இப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment