Tuesday, 24 March 2015

100 அமெரிக்க இராணுவ வீரர்களை கொல்ல அழைப்பு விடும் ISIS….!


அமெரிக்க இராணுவ அதிகாரிகள் 100 பேரை அவர்களது நாட்டிலேயே படுகொலை செய்யப் போவதாக ஐ.எஸ் தீவிரவாதிகளால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ். தீவிரவாத குழுவின் ஒரு பிரிவு 100 அமெரிக்க இராணுவ அதிகாரிகளது பெயர்கள் புகைப்படங்கள் மற்றும் முகவரிகளை இணையத்தளத்தில் வெளியிட்டு அவர்களைக் கொல்வதற்கு அமெரிக்காவில் வசிக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது.
ஐ.எஸ் தீவிரவாத குழுவின் இணையத்தள ஊடுருவல் பிரிவால் மேற்படி அச்சுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. பல இராணுவ இணையத்தளங்கள் தரவுகள் மற்றும் இலத்திரனியல் அஞ்சல்களை ஊடுருவியே இந்தத் தகவல்களை பெற்றதாக அந்த தீவிரவாத குழு உரிமை கோரியுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையில் பங்கேற்றவர்களின் பெயர் விபரங்களே தாம் வெளியிட்டுள்ளதாக மேற்படி குழு குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள தமது ஆதரவாளர்கள் தம்மால் பெயர் வெளியிடப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் இறுதி முன்னடியெடுத்து வைப்பொன்றை மேற்கொள்ள வேண்டும் என அந்த குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியொருவர் விபரிக்கையில் இந்த அச்சுறுத்தல் தகவலின் உண்மைத்தன்மை குறித்து உறுதிப்படுத்த முடியாதுள்ளதாகவும் எனினும் அது தொடர்பில் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment