Wednesday, 25 March 2015

அப்பாடக்கரான குத்து பாடலில் சிம்பு, சுவாதி..!


சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி , த்ரிஷா, அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அப்பாடக்கர்’. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. இன்னும் இரண்டு பாடல்களே பாக்கி இருக்கிறது.
மேலும் இந்த பாடல்களை யார் பாடப்போகிறார்கள் என்பதே சுவாரஸ்யம். நீண்ட இடைவெளிக்கு பிறகு அஞ்சலி ரீஎண்ட்ரி ஆகியிருக்கும் படம் ‘அப்பாடக்கர்’. சூரி காமெடியனாக நடித்து வரும் இப்படத்தில் இரண்டு வேடங்களில் வருகிறாராம் ஜெயம் ரவி.
தமன் இசையமைக்கும் இப்படத்தில் சிம்புவும், சுப்ரமணியபுரம் ஸ்வாதியும் இணைந்து ஒரு குத்து பாடல் பாட உள்ளனர். நடிகை சுவாதி இதுவரை தெலுங்கில் ஒரு சில பாடல்கள் பாடியுள்ளார். ஆனால் தமிழில் பாடுவது இதுதான் முதல் முறை..

No comments:

Post a Comment