நெதர்லாந்தில் நூதனசாலை ஒன்றிலுள்ள ஓவியங்களை சிறுநீர் மூலம் சேதப்படுத்தப் போவதாக அச்சுறுத்திய நபர் ஒருவர் அந்நூதனசாலைக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு நீதிமன்றமொன்று உறுதிப்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டமிலுள்ள இந்நூதனசாலையில் புகழ்பெற்ற பல ஓவியர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆனால், ரொப் வான் எனும் நபர் ஒருவர் இந்நூதனசாலையின் ஓவியங்களை கடுமையாக விமர்சித்து வந்தார்.
பின்னர் அவர் சிறுநீர் மூலம் ஓவியங்களை சேதப்படுத்தப்போவதாகவும் அவர் அச்சுறுத்தினார். அதையடுத்து அந்நபர் நூதனசாலைக்குள் நுழைவதற்கு அதன் நிர்வாகம் தடை விதித்தது.
இத்தடைக்கு எதிராக ஆம்ஸ்டர்டம் நகரிலுள்ள நீதிமன்றமொன்றில் ரொப் வான் வழக்குத் தொடுத்தார். ஆனால், ரொப் வானின் அச்சுறுத்தல் கடுமையானது எனத் தெரிவித்த மேற்படி நீதிமன்றம், அவர் நூதனசாலைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டமைக்கான காரணம் நியாயமானது எனக் கூறியுள்ளது.

No comments:
Post a Comment