Sunday, 22 March 2015

இன்றைய தினம்....!! (மார்ச் 23)


மார்ச் 25
1931
பகத் சிங் தூக்கிலடப்பட்ட தினம்
பகத் சிங் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் விடுதலை இயக்கத்தின் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். விடுதலைக்கு பாடுபட்டாதால் இவரை அனைவரும் மாவீரர் எனப் பொருள்படும் ’சாஹீது’ என்றே அழைத்தனர்.
பகத் சிங் இந்தியாவின் முதலாவது மாக்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு. இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்.
பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது.
முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபத் ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது வயதில் 1931ம் ஆண்டு இதே தினம், தூக்கிலிடப்பட்டார்.
இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது. பகத் சிங்கின் மரண தண்டனை காந்தியின் ஒப்புதலுக்கு இணங்கவே நிறைவேறியது. இதற்காக காந்தி சில சமயங்களில் விமர்சிக்கப்படுவ துண்டு.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1903 - ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்தனர்.
1933 - ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியானது ரெய்க்ஸ்டாக்கினால் சட்டபூர்வமாக்கப்பட்டது.
1956 - பாகிஸ்தான் உலகின் முதல் இஸ்லாமியக் குடியரசாகியது.
1998 - டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.
இன்றைய சிறப்பு தினம்
உலக வானிலை நாள்
குடியரசு நாள் - பாகிஸ்தான்

No comments:

Post a Comment