நீண்ட வருடங்களாக சிம்பு - ஹன்சிகா இணைந்து நடித்து வரும் படம் ’வாலு’. இந்தப் படத்தில் நடிக்கும் போதுதான் சிம்புவும், ஹன்சிகாவும் காதல் வயப்பட்டனர்.
ஆனால் அந்தக் காதல் இந்தப்படத்தில் நடித்து முடிப்பதற்குள் முட்டி மோதிக்கொண்டு காற்றில் அனலாக பறந்துவிட்டது. அப்போது இவர்கள் பிரிவதற்கு பல காரணங்கள் கோடம்பாக்கத்தில் சொல்லப்பட்டது.
முக்கியமாக ஹன்சிகாவின் அம்மா தான் காரணம் என்று கூறப்பட்டது. பிறகு மீண்டும் நயன்தாராவும், சிம்புவும் காதலிக்கிறார்கள் அதனால் தான் சிம்பு ஹன்சிகாவை கழட்டி விட்டார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் காதல் பிரிவிற்கு பிறகும் கூட 'வாலு' படத்துக்காக சிம்புவும், ஹன்சிகாவும் ஒரு பாடலில் இணைந்து நடித்தார்கள். தற்போது இப்படம் சென்சார் முடிந்து, மே 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், ஹன்சிகா உடன் ஏற்பட்ட காதல் பிரிவு குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் சிம்பு. "நாங்கள் இருவரும் உண்மையாக தான் இருந்தோம். வாலு படத்திற்காக சென்ற வருடம் பாங்காக்கிற்கு படப்பிடிப்பிற்குக் கூட சென்றோம். பிரிவுக்கு காரணம் நாங்கள் இருவருமே இல்லை; எங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்பகளும் இல்லை.
பிரிவுக்கு பல்வேறு மற்ற காரணங்கள் உள்ளன. இந்த உறவு நீடிக்க வேண்டும் என்று நான் விரும்பியதால், பிரிவால் வருத்தப்பட்டேன். எனினும், நிலைமையைப் புரிந்து கொண்டேன், அதைக் கையாள வேண்டிய சூழலின்போது, நான் அதை அப்போது செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டேன்."என்று தெரிவித்திருக்கிறார் சிம்பு.

No comments:
Post a Comment