காக்கி சட்டை படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் ’ரஜினி முருகன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், ஈராஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மேலும் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா பெரும் தொகை கொடுத்து வாங்கி உள்ளார்.
சமீபத்தில் ரஜினி முருகன் படத்தை கோடைவிடுமுறையில் அதாவது மேமாதம் வெளியிட உள்ளதாக தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் உத்தமவில்லன் படத்தை திட்டமிட்ட தேதியில் முடிக்காமலும், வெளியீட்டு தேதியை அடிக்கடி கமல் மாற்றியதாலும் அந்த நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் தேதிகளும் தள்ளிப்போய்விட்டது.
உத்தமவில்லன் ஏப்ரல் 14 தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டதால் ரஜினிமுருகன் படத்தின் ரிலீஸ் தேதியும் மாற்றப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, ரஜினிமுருகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏப்ரல் 25 அன்று வெளியிட உள்ளனர்.
படத்தின் ஆடியோவை ஜுன் 7 அன்றும் படத்தை ஜுலை 17 அன்றும் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். உத்தமவில்லன் திட்டமிட்ட தேதியில் வெளியாகி இருந்தால் ஏற்கனவே திட்டமிட்டபடி அனைத்து படங்களின் பணிகளும் சரியாக நடந்திருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் கோடை விடைமுறையில் படம் ரிலீஸானால் தன் படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்று நினைத்த சிவகார்த்திகேயன் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால் அப்செட்டில் இருக்கிறாராம்.

No comments:
Post a Comment