திரைப்படங்களில் நடிப்பதற்காக பெண்களை ஒத்திகை நடிப்புகளில் ஈடுபடுத்தும்போது இயக்குநர் ஒருவர் நடந்துகொண்டுள்ள விதம் குறித்த சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் 65 ஆண்டுகளின் பின்னர் வெளியாகியுள்ளன.
1950 ஆம் ஆண்டுகளில் லைஃப் பத்திரிகையின் ஜேம்ஸ் பர்க் என்ற புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட படங்களே தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளன. டிலாகி (1949), துலாரி (1949), டில் தியா டார்ட் லியா (1966) போன்ற பிரபல ஹிந்தித் திரைப்படங்களை இயக்கிய ஏ.ஆர். காதர் என்பவரே சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஒத்திகை நடிப்புக்காக வரும் பெண்களை ஒவ்வொரு கோணத்தில் நிற்கச் சொல்லியும் மேலாடைகளை அகற்றியும் அவர் பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மூடிய அறைக்குள்ளேயே ஒத்திகை நடிப்பு பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் காதரின் பார்வையில் காமம் கலந்திருப்பதாக லைஃப் பத்திரிகையின் புகைப்படக் கலைஞர் அப்போதே கருத்து வெளியிட்டிருந்தார். சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமலேயே இப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
காதருக்கு அருகில் இருப்பவர் அவருடைய திரைத்துறை நண்பராக இருக்கலாம் என இந்திய ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன. இந்தப் புகைப்படங்கள் தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் தகவல்கள் கசியலாம் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

No comments:
Post a Comment