Thursday, 19 March 2015

யுவனை தூக்கிய சூர்யா..? முற்றுப்புள்ளி வைத்த வெங்கட்பிரபு..!


வெங்கட் பிரபு படம் என்றாலே கண்டிப்பாக அந்த படந்துக்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசை என்பது வழக்கமான ஒன்று. ஆனால் கடந்த இரு தினங்களாக யுவன் ஷங்கர் ராஜாவை வெங்கட் பிரபு இயக்கிவரும் மாஸ் படத்தில் இருந்து தூக்கி விட்டார்கள் என்றும், அதற்கு முக்கிய காரணம் சூர்யாதான் என்றும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இதற்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளார் வெங்கட் பிரபு.
பிரியாணி படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் மாஸ் படத்தை இயக்கிவருகிறார் வெங்கட் பிரபு. இப்படத்திற்காக பல டியுன்களை கொடுத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. இந்நிலையில் திடீரென இந்தப் படத்தின் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் நீக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
அவருக்குப் பதில் தமனை இசையமைக்குமாறு சூர்யா கூறிவிட்டார் என்றும், அவர் இசையில் ஒரு பாடல் உருவாக்கப்பட்டு, படப்பிடிப்பும் நடக்கிறது என்றும் கூறப்பட்டது. சூர்யாவின் இந்த செயல் யுவனை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியதாக சொல்லப்பட்டது. ஆனால் இன்னொரு பக்கம், அவருடைய சம்மதத்தோடுதான் தமன் இசையில் ஒரு பாடல் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டதாக சிலர் புது விளக்கம் கூறினர்.
இந்த நிலையில் இந்த குழப்பத்துக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் வெங்கட் பிரபு டுவிட்டரில் ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளார். அதில் யுவன்தான் எங்க மாஸ் இசையமைப்பாளர், அதில் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment