Thursday, 19 March 2015

விஜய்யை போன்று வேணும்.. அடம் பிடிக்கும் ஜெயம்ரவி..!


ஒரே மாதிரியான கதைகளில் நடித்து ரசிகர்களை போரடிக்கக்கூடாது என்று வித விதமான கதை தேர்ந்தெடுத்து நடித்து வருப்பவர் ஜெயம் ரவி.
கடந்த சில படங்களாக தொடர்ந்து சீரியசான கதைகளில் நடித்துவந்த அவர் தற்போது ரோமியோ ஜூலியட், அப்பாடக்கர் என்ற இரண்டு ஜாலியான படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் காமெடி காட்சிகளிலும் கலந்து கட்டி நடித்திருக்கும் ஜெயம்ரவி, பாடல் காட்சிகளிலும் நடிகைகளுடன் இணைந்து அதிரடி ஆட்டம் போட்டிருக்கிறாராம்.
குறிப்பாக, சுராஜ் இயக்கத்தில் நடித்துள்ள அப்பாடக்கர் படத்தில் அஞ்சு பைசா பத்து பைசா வட நானு, என்ற பாடலில் ஒரு மும்பை ஐட்டம் நடிகையுடன் ஆடியிருக்கும் ஜெயம்ரவிக்கு அந்த பாடல் ரொம்பவே பிடித்துள்ளதாம்.
அதனால் தனது புதிய படங்களின் இயக்குநர்களிடம் பாடல்களில் அதிக கவனம் செலுத்த சொல்லும் அவர், விஜய்க்கு எழுதுவது போன்று மாஸ் பாடல்களை படத்தில் வையுங்கள் என்றும் கேட்டுக்கொண்டு வருகிறாராம்.

No comments:

Post a Comment