பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெண் நாளொன்றுக்கு 50 முறை தூங்கி விழுகின்றாராம். நம்பமுடிகிறதா??
Jacky Lloyd என்ற இந்தப் பெண்மணி நார்கோலெப்சி என்ற நோயால் பாதிக்கப்பட்டு இப்படி தூங்கி வழிகின்றாராம்.
இவர் எப்போது தூங்குவார் என்று இவருக்கே தெரியாது. இவரது இந்த நோய்க்கு மருத்துவர்களை அணுகியும் எந்த ஒரு பயனும் இல்லையாம்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இந்த நோயானது நரம்பியல் பிரச்சனையால் ஏற்படுவதாகும். இதற்கான அறிகுறி 10 முதல் 15 வயதுக்குள்ளாகவே தெரிந்துவிடும் என்று கூறியுள்ளனர்.
தனது இந்த நோய் குறித்து Jacky Lloyd கூறுகையில், அவர் நிற்கும்போது தூங்கி விழுவதால் பலமுறை காயம் அடைந்திருக்கின்றாரம். மேலும், இவர் வேலை பார்த்த இடத்தில் தூங்கிவிழ அங்கிருந்து இவரை தூக்கி விட்டார்களாம்.
தனது குழந்தைகளிடம் சரியாக பேச முடிவதில்லை என்று வருத்தப்படுகிறார். மேலும் வாகனம் ஓட்டுவதையும் நிறுத்திவிட்டாராம்.

No comments:
Post a Comment