பல படங்களில் கிளாமர் வேடங்களில் நடித்திருப்பவர் இரண்டு எழுத்து பெயர் கொண்ட அந்த கவர்ச்சி நடிகை.
இவர் சில வருடங்களுக்கு முன் பிரியாணி இயக்குநரிடம் தான் தயாரிக்கும் படத்தை இயக்குவதற்காக ஒரு பெரிய தொகையை அட்வான்ஸாக கொடுத்தார். ஆனால் அவர் இதுவரை படமும் இயக்கவில்லை, அட்வான்ஸும் திருப்பி தரவில்லை. இதனால் அந்த கவர்ச்சி நடிகை பிரியாணி இயக்குநர் மீது புகார் கூறி இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ’வாட்டர்ல கண்டம்’ என்ற படத்தின் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அந்த கவர்ச்சி நடிகை , இந்தப் படம் எனக்கு ரொம்பவே பிடிச்சிப் போச்சு, நானே ரிலீஸ் செய்யணும்னு நினைச்சேன். ஆனால் என்னால் வாங்க முடியவில்லை. இப்படி நான் கஷ்டப்படுவதற்கு யார் காரணம் என்பதை சொல்ல வேண்டும் என தோன்றுகிறது.
எனக்கு வரும் கோபத்துக்கு அவன ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் என்ன செய்வது? கொஞ்சம் பொறுங்கள், கூடிய விரைவில் அவனையும், அவன் சம்பந்த பட்ட ரகசியங்களையும் எல்லோரிடமும் கூறுவேன் என்று மேடையிலிருந்து கீழே வந்துவிட்டார். அவர் யாரை சொல்கிறார் என்று மறைமுகமாக சொன்னாலும் அது பிரியாணி இயக்குநர் தான் என்று அங்கிருந்தவர்கள் அறிந்துவிட்டார்கள்.
சில வருடங்கள் முன்பு பிரியாணி இயக்குநரும் அவருடைய தம்பியும், இந்த கவர்ச்சி நடிகையுடன் ரொம்ப நெருங்கமாக இருந்தார்கள். இவர்கள் நெருக்கமாக இருந்தப்படி புகைப்படங்கள் கூட வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment