அங்காடித் தெரு படத்தில் கருங்காலி என்ற கதாபாத்திரத்தில் கொடூர வில்லனாக வந்து ரசிகர்களை மிரட்டியவர் ஏ.வெங்கடேஷ். இவர் பகவதி, குத்து, ஆதி, சாணக்கியா உட்பட பல ஆக்ஷன் படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது இவர் இயக்கிய சண்டமாருதம் படம் திரையரங்குகளில் ஒடிக் கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து வருகிற 6 -ஆம் தேதி ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கும் முதல் முழுநீள காமெடிப் படமான ரொம்ப நல்லவன்டா நீ வெளியாகிறது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தான் பல வருடமாக கிடப்பில் கிடந்த‘கில்லாடி’ படம் வெளியானது.
இதன் மூலம் இவர் ஒரு அறிய சாதனையை படைத்திருக்கிறார். அதாவது 35 நாட்கள் இடைவெளியில் ஒரே இயக்குநரின் 3 படங்கள் ரிலீஸ் ஆவதுதான். உலக அளவில் 35 நாட்களில் எந்த இயக்குநரின் 3 படங்கள் வெளியானதில்லை. இதுவொரு உலக சாதனை.
இதுபற்றி கருத்து தெரிவித்த ஏ.வெங்கடேஷ், என்னோட சினிமா வாழ்கையில் இது முக்கியமான தருணம். சண்டமாருதம் வெற்றிகரமாக ஓடுகிறது. நான்கு வருடங்கள் கிடப்பில் கிடந்த கில்லாடி வெளியானது. என்னுடைய முதல் காமெடி முயற்சியான ரொம்ப நல்லவன்டா நீ வருகிற 6 ஆம் தேதி வெளியாகிறது.
ஒரே இயக்குநரின் 3 படங்கள் 35 நாட்களுக்குள் வெளியானதில்லை. இதுவொரு சாதனை என்கிறார்கள். இது எதிர்பாராமல் நடந்திருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

No comments:
Post a Comment