Tuesday, 24 March 2015

விஸ்வரூபம் 2 தாமதத்திற்கு ஆஸ்கர் ரவிச்சந்திரன் தான் காரணம்..?


விஸ்வரூபம் 2 தாமதத்திற்கு ஆஸ்கர் ரவிச்சந்திரன் தான் காரணம் என்று கூறியுள்ளார் கமல்.
பல பிரச்சினைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் மத்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற படம் ’விஸ்வரூபம்’. இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது வெளியாகும், அப்போது வெளியாகும் என்று தாமதித்துக்கொண்டே போகிறது.
இதனால் படம் எப்போது ரிலீஸாகும் என்று எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர் ரசிகர்கள். விஸ்வரூபம் முதல் பாகம் வெளியானபோதே, இரண்டாம் பகுதியின் பெருமளவு காட்சிகளை முடித்துவிட்டிருந்தார் கமல்.
ஆனால் படம் வெளிவந்தபாடில்லை. அந்தப் படம் முடிந்த பிறகு, அடுத்தடுத்து உத்தம வில்லன், பாபநாசம் படங்களில் நடித்துவிட்ட கமல், மேலும் இரு புதிய படங்களில் நடிக்க பேசி வருகிறார். இந்நிலையில் 'விஸ்வரூபம் 2' படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட காரணம் என்ன என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் கமல்.
அவருடைய நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘உத்தமவில்லன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டில் நடைபெற்றது. அப்போது 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதில் ஏன் இவ்வளவு தாமதம், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் உங்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுதான் காரணமா? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கமல், "எங்களுக்குள் நிச்சயமாக கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் இந்தப் படம் தாமதமாவதற்கு சில காரணங்களைச் சொல்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அவை நிச்சயம் ஏற்கும்படி இல்லை என்பதுதான் உண்மை. அவர் பணக் கஷ்டத்தில் இருப்பது போலவும் தெரியவில்லை. இருந்தும் இப்படத்தை வெளியிடுவதில் ஏன் தாமதப்படுத்திகிறார் என்றுதான் புரியவில்லை," என்றார்.

No comments:

Post a Comment