கே.வி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா தாஸ்துர், கார்த்திக் நடிப்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி வெளிவந்த படம் அனேகன்.
நான்கு காலக்கட்ட காதல் கதையை மையப்படுத்தி வந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதாகவும், இதுவரை எந்த தனுஷ் படத்திற்கும் இல்லாத அளவிற்கு மாபெரும் ஓப்பனிங் கிடைத்தாகவும் கூறப்பட்டது.
மேலும் சில நாட்களுக்கு முன்பு இப்படம் ரூ 66 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படம் மொத்தமே ரூ 33 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.
ரூ 20 கோடிக்கு படம் எடுத்து கிடைத்த வசூலில் தயாரிப்பாளருக்கு ரூ 13 கோடி தான் ஷேர் வந்துள்ளது. இதன் மூலம் ரூ 7 கோடி வரை இப்படம் நஷ்டத்தை சந்தித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஆனால் தனுஷ் தன் படத்தின் புரமோஷனுக்காக 60 கோடி வசூல் செய்துள்ளதாக பொய்யான வசூல் நிலவரத்தை சொல்லி இருக்கிறார்.

No comments:
Post a Comment