மார்ச் 25
1954
முதல் வண்ணத் தொலைகாட்சி விற்பனைக்கு வந்தது
உலகில் கைபேசிக்கு முன் பெரும் ஆதிக்கம் செய்தது தொலைக் காட்சி. உலகில் நடக்கு அத்தனை நிகழ்வுகளையும், இன்றைய கைபேசிகள் கைக்குள் கொண்டு வருவது போல், 90களில் அனைத்து நிகழ்வுகளையும் இல்லத்திற்குக் கொண்டுவந்து செர்த்தவை தொலைக்காட்சி பெட்டிகள்.
1920லிருந்தே கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிகள் புழக்கத்தில் உள்ளன. வண்ணத் தொலைகாட்சிகள் 1940களில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் 1950களில் தான் விற்பனைக்கு வந்தன.
இந்த முதல் கலர் டி.வி.க்களை ஆர்.சி.ஏ., என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 12” திரை அளவு கொண்ட இந்த முதல் கலர் டி.வி.க்களின் விலை 1000 அமெரிக்க டாலர்களாம். இன்றைய மதிப்பில் சுமாராக 62000.
என்னதான் டி.வி.க்கள் வளர்ச்சி அடைந்து, ஸ்மார்ட்டாக வந்தாலும், ஸ்மார்ட் போன்களின் போதையில் தான் மக்கள் கிரங்கிக் கிடக்கின்றனர்.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1954 - இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.
1965 - மனித உரிமைவாதி மார்ட்டின் லூதர் கிங் தனது 4-நாள் 50-மைல் எதிப்புப் பயணத்தை முடித்துக் கொண்டார்.
1975 - சவுதி மன்னர் ஃபைசால் தனது மருமகனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இன்றைய சிறப்பு தினம்
மனித உரிமை போராட்ட தினம் (ஸ்லோவேக்கியா)
டோல்கியேன் படிக்கும் தினம் சுதந்திர தினம் (பெலாரஸ்)
மேரிலாந்து நாள் (மேரிலாந்து)
அன்னையர் தினம் (ஸ்லோவேனியா)
.jpg)
No comments:
Post a Comment