ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இன்று வடக்கிற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்.
25வருடங்களின் பின்னர் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்ட வளலாய் பகுதியை உத்தியோக பூர்வமாக அவர்களிடத்தில் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இவர்கள் சென்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசாங்கம் அமையப்பெற்றதன் பின்னர் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்கள் மீண்டும் மக்களிடத்தில் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, பிரதமர் ரணில்விக்கிரசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் போது வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment