Monday, 23 March 2015

இன்றைய தினம்....!! (மார்ச் 24)


மார்ச் 24
1947
மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் ஆளுநரானார்
மவுண்ட்பேட்டன் பிரபு, இந்தியாவின் கடைசி வைசிராயும், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் ஆளுநரும் ஆவார். அரச குடும்பத்தில் பிறந்த இவர் பர்மாவின் கோமகன் என்று அறியப்பட்டார்.
ஆங்கிலேயக் கடற்படைத் தளபதியாக இருந்த இவர், இந்தியாவின் அரச பிரதிநிதியாகினார். பின்னர் 1947ம் ஆண்டு இதே தினத்தன்று ஆளுநரானார். அயர்லாந்தில் தனது விடுமுறையைக் கழிக்கும் போது ஐரிஷ் ராணுவத்தினர் அவரது படகில் குண்டு வைத்துக் கொன்றனர்.
இந்த குண்டுவெடிப்பில் இவரது பெயரன் நிக்கோலஸ் உட்பட மொத்தம் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1965 - டட்லி சேனநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
1965 - நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிகு அனுப்பியது.
1998 - இந்தியாவில் டண்டான் பகுதியில் இடம்பெற்ற புயலில் 250 பேர் கொல்லப்பட்டு 3000க்கு மேல் காயமடைந்தனர்.
இன்றைய சிறப்பு தினம்
சர்வதேச காச நோய் தினம்
தேசிய புரட்சி நாள் (கிர்கிஸ்தான்)
உண்மை மற்றும் நீதியின் நினைவு நாளை (அர்ஜென்டீனா)
தேசிய மரநடுகை தினம் (உகாண்டா)

No comments:

Post a Comment